தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

சிறுபாக்கம்; நெய்வேலி மற்றும் பண்ருட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசை கண்டித்து கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் நாளை 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு நெய்வேலி என்.எல்.சி., ஆர்ச் கேட் எதிரிலும், பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறத்திலும் பொதுக் கூட்டம் நடக்கிறது.

எனது தலைமையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் இளைஞரணி மாநில துணை செயலர் அப்துல் மாலிக் முன்னிலை வகிக்கிறார். பேச்சாளர்கள் மில்டன், ஷிபானா மரியம் பீவி, டாக்டர் யாமினி, முல்லை வேந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர். பொதுக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement