இப்தார் நோன்பு திறப்பு

கடலுார்; கடலுார் செம்மண்டலம் பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க.,நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடலுார் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சமனே நுாரியா முகமதியா ஜாமியா மஸ் ஜித் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க., முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், தொழிலதிபர்கள் பஷிருல்லா, தவ்பிக், மாநகராட்சி கவுன்சிலரகள் பிரகாஷ், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பள்ளி வாசல் நிர்வாகிகள் முகமது ரபித், சாதிக் பாஷா, ரபியுல்லா ஆகியோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Advertisement