108 கோ பூஜை விழா

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் ஸ்ரீபெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 11ம் ஆண்டு கோ பூஜை விழா நடந்தது.
காலையில் மூலவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உலக நன்மை வேண்டி, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மகா யாகம் செய்து, புனிதநீர், சந்தனம், பால், பன்னீர் போன்ற திரவியங்களல் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பின், பசுக்களுக்கு வஸ்திரங்கள் சாற்றி, அன்னம் வழங்கப்பட்டது. துாத்துக்குடி, ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வார் அவதார ஸ்தலம்), 41வது பட்டம், ஸ்ரீமான் ரங்க ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கோ பூஜையை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து, 108 பசுக்களுக்கு வெள்ளம் கலந்த அரிசி, பழங்கள், கீரைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி