மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் ஆலோசனை
புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலுாரில் ஆலோசனை வழங்கினார்.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்னைகளுக்கு சிறப்பு நிபுணர் நேற்று காலை விழுப்புரம் ராஜராஜேஸ்வரி நகர், ஆர்.ஆர்.எம்., காஸ்ட்ரோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து மதியம் கடலுார் மஞ்சக்குப்பம் பிவெல் மருத்துவமனையிலும், மாலை புதுச்சேரி மடுவுப்பேட் பிவெல் மருத்துவமனையிலும் ஆலோசனை வழங்கினார்.
முகாமில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய், ஹெபடைடிஸ் பி அண்டு சி, இரைப்பை குடல் ரத்தப்போக்கு, கணைய பிரச்னைகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் வயிற்று வலி (சிரமம், கட்டி) வயிறு வீக்கம், குமட்டல் அல்லது வாந்தி, ரத்த வாந்தி, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், ரத்தம் வெளிர், கருப்பு நிற மலம் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்தார்.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி