நத்ஹர்வலி தர்காவுக்கு பட்டுப்போர்வை திருச்சி சாரதாஸ் நிறுவனம் வழங்கல்

புதுச்சேரி : திருச்சி சாரதாஸ் நிறுவனத்தில் நெய்த பட்டுப் போர்வை நத்ஹர்வலி தர்காவுக்கு வழங்கப்பட்டது.

திருச்சி சாரதாஸ் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு பண்டிகை மற்றும் விழாக்களின் போது தரத்துடன், நியாயமான விலையில் பல்வேறு மாடல்களில் ஜவுளிகளை விற்பனை செய்து வருகிறது.

நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சாரதாஸ் நிறுவனம் நெசவிற்கு கை கொடுப்போம் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பட்டு பிரிவு வளாகத்தில் சொந்த செலவில் தறி கூடம் அமைத்து பட்டு சேலைகளை நெய்து வருகின்றது.

அதில், முதல் பட்டு சேலையை உற்பத்தி செய்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவதாக, பட்டு போர்வை தயாரித்து திருச்சி - மதுரை ரோட்டில் உள்ள நத்ஹர்வலி தர்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி சாரதாஸ் நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சாரதாஸ் நிர்வாக இயக்குனர்கள் ரோஷன், சரத் ஆகியோர் கலந்து கொண்டு, தர்காவின் அவ்ரங்கசீப் , தாஜுதீன், மன்சூர், நத்ஹர்வலி தர்கா தலைமை அறங்காவலர் அல்லா பக் ஷ், தலைமை கலிபா சையத் சதாத் சாஹிப் முன்னிலையில், பட்டு போர்வையை வழங்கினர்.

சொந்தமாக தறியில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பட்டுச் சேலையும், இறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்படும் என, நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்தனர்.

Advertisement