100 சதவீதம் ஒத்துழைப்பு; தொகுதி மறுவரையறை கூட்டுக்குழுவில் ஸ்டாலினுக்கு பஞ்சாப் முதல்வர் உறுதி

சென்னை: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது' என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசினார்.
சென்னை கிண்டியில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசியதாவது: அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முன்னெடுப்பை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை தொகுதி மறுசீரமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது.
தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிப்பை சந்திக்கும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அதனை தக்க வைக்க பா.ஜ., முயற்சிக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.









மேலும்
-
அது ஒரு அர்த்தமில்லாத கூட்டம்: முதல்வர் நடத்திய கூட்டம் பற்றி சீமான் விமர்சனம்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐ.பி.எல்., திருவிழா; ஷாருக்கானுடன் நடனமாடி கோலி குதூகலம்
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி
-
குழந்தை திருமணங்கள்: ஒடிசாவில் தொடரும் அவலம்!