தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!

ராஞ்சி: '' மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது'' என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கூட்டம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டத்தை நான் வரவேற்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
ஆய்வு
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பாகவும், தொகுதி மறு வரையறை செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. மாநிலத்தில் பழங்குடியினருக்கான தொகுதிகளை குறைக்க முயற்சி நடந்தபோது, கடுமையான போராட்டங்கள் நடந்தன.
ஏன் பழங்குடியினருக்கான தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும்? சென்னையில் நடந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு
-
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம் தகவல்
-
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் 5 பேர் கைது; குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்!
-
தேர் சாய்ந்ததில் இருவர் பலி
-
ம.பி.,யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; காஷ்மீர் விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு
-
அறிவே கடவுள் என வலியுறுத்தும் புத்தக கோவில்; பக்தர்களுக்கு புத்தகமே பிரசாதம்!