பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.

நவீன்ராஜ்
சென்னையில் வசிக்கும் சுயாதீன புகைப்படக்கலைஞர்.
வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்ட திருமணம் உள்ளீட்ட விசேஷங்களை படமெடுக்கும் இவரது கேமரா, இன்னோரு பக்கம் மக்களின் கலாச்சாரம், பராம்பரியத்தை தேடித்தேடி பயணிக்கிறது.
கடந்த பதிமூன்று வருடங்களாக பல இடங்களுக்கு பயணித்து இவர் எடுத்த புகைப்படங்கள் பல மீடியாக்களில் வெளியாகி இவருக்கு புகழைத் தேடித்தந்துள்ளன.இவரது படங்கள் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
ஒவ்வொரு மனிதரின் கண்களிலும் சொல்லப்படாத கதைகள் நிறையவே இருக்கிறது சம்பந்தப்பட்ட படங்கள் அந்த மனிதரின் உலகத்தைக் காட்டும் ஜன்னலாகிறது இது போன்ற உணர்வுபூர்வமான படங்களை பதிவு செய்யும் இவரது பயணத்தில் சமீபத்தில் இடம் பெற்றதுதான் 'இருளர் திருவிழா'.
இருளர் சமூகத்தினர் தமிழகத்தின் முக்கிய பழங்குடியினர், கால்நடைகளை மேய்த்தல், மூலிகைகள் சேகரித்தல், வேட்டையாடுதல், மற்றும் விவசாய உதவியாளர்களாக செயல்படுதல் போன்ற இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை இவர்கள் பின்பற்றுகின்றனர்.
இச்சமூகத்தினர் வருடந்தோறும் தங்களது பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக மகாபலிபுரத்தில் கூடுகின்றனர்.
"இருளர் திருவிழா" என்ற தலைப்பின் கீழ் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகள், இசை, நடனம் மற்றும் தெய்வ வழிபாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.
இருளர் சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை அவர்களது பராம்பரிய வழிபாடுகளை தனது கேமராவில் பிரமாதமாக பதிவு செய்துள்ள புகைப்படக்கலைஞர் நவீன்ராஜ் தனது புகைப்படங்கள் மூலம் இருளர் சமூகத்தினருக்கு நலம்தரும் நல்லதொரு பதிவை தந்துள்ளார் என்றே கூறலாம்.
-எல்.முருகராஜ்
மேலும்
-
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம் தகவல்
-
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் 5 பேர் கைது; குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்!
-
தேர் சாய்ந்ததில் இருவர் பலி
-
ம.பி.,யில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி; காஷ்மீர் விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு
-
அறிவே கடவுள் என வலியுறுத்தும் புத்தக கோவில்; பக்தர்களுக்கு புத்தகமே பிரசாதம்!
-
மலம்புழாவில் பெருங்கற்கால சின்னங்கள்: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்