மலம்புழாவில் பெருங்கற்கால சின்னங்கள்: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்

6


பாலக்காடு: மலம்புழா அணை அருகே, அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்கள் கண்டறியப்பட்டது, தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது மலம்புழா அணை. இந்த அணை அருகே தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளில் பெருங்கற்கால சின்னங்கள் கண்டறியப்பட்டன. இந்த சின்னங்கள், அணைக்கு அருகே தீவு போன்ற மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளன. மொத்தம் 45 ஹெக்டர் பரப்பில் 110 பெருங்கற்கால சின்னங்களை தொல்லியல் துறை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
Latest Tamil News

Latest Tamil News
இவை அனைத்தும் பெரும்பாலும் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களாக உள்ளன. கல் வட்டம், தாழிகள், கல் திட்டைகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை, மிகப்பெரிய கற்பலகைகளை கொண்டும், கற்களை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News

Latest Tamil News
இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்கள், ஒரே இடத்தில் கண்டறியப்பட்டது, ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கேரளாவில், முன் இரும்புக்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களது நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை புரிந்து கொள்ள முடியும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement