ஜார்க்கண்ட் குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எப். வீரர் வீர மரணம்

சாய்பாசா:ஜார்க்கண்டில் நடைபெற்ற நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது வெடிப்பில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சோட்டானக்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள வான்கிராம் மரங்போங்கா வனப்பகுதிக்கு அருகே நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.

பாதுகாப்புப் படையினரை குறிவைத்து மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த குண்டு, தேடுதல் நடவடிக்கையின் போது வெடித்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement