செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'

பாட்னா: உலக கோப்பை செபக்தக்ரா இரட்டையரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.

பீஹாரில், உலக கோப்பை செபக்தக்ரா 5வது சீசன் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 (9-15, 9-15) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. உலக கோப்பை பெண்கள் இரட்டையரில் முதன்முறையாக வெள்ளி வென்று வரலாறு படைத்தது இந்தியா.

ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-2 (11-15, 12-15) என தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
இதுவரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்துள்ளன. ஏற்கனவே ஆண்கள், பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தலா ஒரு வெண்கலம் கிடைத்தது.

Advertisement