'விக்சித் பாரத்' இந்தியாவை முன்னோக்கி எடுத்துச்செல்லும்; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி: உலக நாடுகள் வரி விதிப்பு சண்டையிட்டு கொண்டிருந்தாலும், விக்சித் பாரத் என்ற இலக்கு இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்- ஈரான் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஷாப்கா சாத், ஷாப்கா விகாஷ் என்ற மந்திரத்தை வெளியுறவு கொள்கையில் கடைபிடித்து வருகிறோம். உக்ரைன், ரஷ்யா போரில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போல அல்லாமல், அமைதியின் பக்கம் தான் இந்தியா நிற்கிறது.
அதேபோல, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு மத்தியிலும் இரு நாடுகளுடனான உறவில் சமநிலையை கடைபிடிக்கிறது. இந்தியாவின் இந்த நடுநிலை தன்மையை அண்மையில் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூட பாராட்டினார். எங்கள் மீதான சசிதரூரின் கருத்துக்களை எப்போம் பாராட்டுகிறேன்.
உலக நாடுகள் வரி விதிப்பு போரினால் சண்டையிட்டு கொண்டிருந்தாலும், விக்சித் பாரத் என்ற இலக்கின் மூலம் 'இந்தியா தான் முதலில்' என்ற அணுகுமுறையை உருவாக்கும். உலகம் இன்று தொழில்துறை கொள்கைகள், ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள், வரிப்போர் உள்ளிட்டவற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரத்தை ஆபத்தில் இருந்து மீட்டெடுப்பது குறித்து கவலை எழுந்துள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட உற்பத்தியே அதற்கான தீர்வாக இருக்கும், எனக் கூறினார்.




மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச வெயில் எங்கே தெரியுமா? வானிலை மையம் அப்டேட் இதோ!
-
அமெரிக்கா வெளியேற்றிய துாதருக்கு தென் ஆப்ரிக்காவில் உற்சாக வரவேற்பு!
-
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
-
ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்
-
செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'
-
பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!