ஹரியானாவில் ஏசி வெடிப்பு? 4 பேர் பலி

சண்டிகர்: ஹரியானா மாநிலம் பகதுர்கர்க் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட வெடிப்பில் ஒரே குடுமப்த்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிலிண்டர் வெடிப்பு ஏதும் இல்லை. படுக்கை அறையில் தான் வெடித்து உள்ளது. இதனால், வீட்டின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வந்து வெடிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்கின்றனர். சிலிண்டரில் எந்த பாதிப்பும் இல்லை. ஏசியில் தான் சேதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், ஏசி வெடித்தது என உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement