அன்கிதா ஜோடி சாம்பியன்

லுவான்: சீன ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையரில் அன்கிதா ரெய்னா ஜோடி சாம்பியன் ஆனது.
சீனாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மேட்லின் ஜோடி, ரஷ்யாவின் கிறிஸ்டினா டிமிட்ரக், கிரா பல்லோவா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அன்கிதா ஜோடி 6-0 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய அன்கிதா ஜோடி 6-3 என கைப்பற்றியது. 57 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் அன்கிதா ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement