கூடைபந்து: இந்தியா அபாரம்

மனாமா: ஆசிய கூடைப்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி, 97-77 என ஈராக்கை வீழ்த்தியது.
ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடர் வரும் ஆகஸ்ட் 5-17ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று பஹ்ரைனில் நடக்கின்றது. இந்திய அணி எச் பிரிவில் ஈராக், பஹ்ரைனுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஈராக்கை சந்தித்தது.
துவக்கத்தில் இரு அணியும் 30-30 என சமனில் இருந்தன. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 97-77 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் ஹபீஸ் 17, பிரனவ் பிரின்ஸ் 14, ஹர்ஷ் தாகர் 13 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.
அடுத்து இந்திய அணி, பஹ்ரைனை சந்திக்கிறது. இதில் வென்றால் தொடர்ந்து 11வது முறையாக ஆசிய கோப்பை கூடைபந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
-
ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்
-
செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'
-
பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!
-
கேரளா பா.ஜ., தலைவராகிறார் ராஜிவ் சந்திரசேகர்; விரைவில் வெளியாகும் அறிவிப்பு
-
சென்னை அபார தொடக்கம்; திலக் வர்மா நிதான ஆட்டம்
Advertisement
Advertisement