திஷா ஆடல்...ஷ்ரேயா கோசல் பாடல் * துவக்க விழாவில் ரசிகர்கள் துள்ளல்

கோல்கட்டா: இந்தியாவில் பிரிமியர் 'டி-20' தொடரின் 18வது சீசன் நேற்று, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. கடந்த இரு நாட்களாக மழை காரணமாக மைதானம் மூடப்பட்டு இருந்து. நேற்று மாலை மழை பெய்யாததால், திட்டமிட்டபடி பிரிமியர் தொடர் துவங்கியது. கோல்கட்டா அணி சக உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், விழாவை துவக்கி வைத்தார்.
பிரிமியர் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ஷ்ரேயா கோசல், பாடல் பாடி அசத்தினார். அடுத்து பாலிவுட் நடிகை திஷா படானி நடனமாடினார்.
திடீரென நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட, திஷா படானி நடனத்தை 'டிவி' ரசிகர்கள் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து பஞ்சாப் பாடகர் கரண் அயுஜ்லா, பாடினார். பெங்களூரு அணியின் கோலி, கோல்கட்டா வீரர் ரிங்கு சிங் என இருவருடன் நடனம் ஆடினார் ஷாருக்கான். பின், 18 வது பிரிமியர் தொடரை கொண்டாடும் வகையில், கேக் வெட்டப்பட்டது.
கோல்கட்டா கேப்டன் ரஹானே, பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர் என இருவரும் பிரிமியர் கோப்பையுடன் வலம் வந்தனர்.

Advertisement