இளைஞரிடம் பிக் பாக்கெட் வாலிபர் கைது

சென்னை,மதுரை, சறுதுார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாமணி, 30. இவர், நேற்று முன்தினம் மாலை, எழும்பூர் சிராஜ் மஹாலில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது, மர்மநபர் ஒருவர், 10,500 ரூபாய் அடங்கிய அவரது மணி பர்சை பிக் பாக்கெட் அடித்து, தப்ப முயன்றார்.

உடனே, பொதுமக்களின் உதவியுடன் பிக் பாக்கெட் அடித்த நபரை பிடித்து, எழும்பூர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால், 39, என்பதும், சென்னையில் ஆங்காங்கே கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement