நடைபாதையில் 'தடை' எதற்கு?

சுகாதாரக்கேடு
பல்லடம், ராயர்பாளையம் பிரிவு - எஸ்.ஏ.பி., கிராஸ் ரோடு, உழவர் சந்தை முன் குப்பை அள்ளப்படாாமல் அப்படியே உள்ளது. குப்பை அள்ள வேண்டும்.
- சேகர், பல்லடம்.
பல்லாங்குழி
திருப்பூர் புது மார்க்கெட் வீதி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பஸ்கள் கடந்து செல்ல தடுமாறுகின்றன. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், புது மார்க்கெட் வீதி. (படம் உண்டு)
பார்க்கிங் எங்கே?
திருப்பூர், கே.பி.என்., காலனி, அண்ணா நகரில், நடைபாதையில், மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
- சுரேஷ், கே.பி.என்., காலனி. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
காந்தி நகர் - ஏ.பி., நகரில் கால்வாய் உடைந்து சேதமாகியுள்ளது. கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல், தேங்குகிறது.
- தெய்வசிகாமணி, ஏ.பி., நகர். (படம் உண்டு)
தண்ணீர் வீண்
பல்லடம், 11வது வார்டு, பி. வடுகபாளையம், கொங்கு நகர் இரண்டாவது வீதியில் குழாய் உடைந்து, கால்வாயில் தண்ணீர் வழிந்தோடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- பிரகாஷ், கொங்கு நகர். (படம் உண்டு)
துர்நாற்றம்
வெள்ளகோவில், முத்துார் மெயின் ரோட்டில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.
- பூபதி ராஜா, முத்துார். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள பி.எஸ்.என்.எல்., வளாகத்தில் இலை, தழை குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சுத்தம் செய்ய வேண்டும்.
- நடராஜன், புதிய பஸ் ஸ்டாண்ட். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 21வது வார்டு, எல்.ஜி., கிரவுண்ட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.
- ஜெயஹரிணி, எல்.ஜி., கிரவுண்ட் முதல் வீதி. (படம் உண்டு)
இருள்மயம்
பல்லடம், சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் நகர் பகுதியில் வாகனம் மோதி மின்கம்பம் சேதமடைந்துள்ளது. தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- வரதராஜன், எஸ்.ஏ.பி., சேரன்நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
வெள்ளைக்கோடு
திருப்பூர், பத்மாவதிபுரம் பகுதியில் வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரையாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கினர். 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது.
- சங்கர், பத்மாவதிபுரம். (படம் உண்டு)
கால்வாய் சுத்தம்
திருப்பூர், பி.என்., ரோடு, நெசவாளர் காலனி, ஜவஹர் நகர், மாரியம்மன் கோவில் கிழக்கு வீதியில் கால்வாய் அடைப்பு குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர் மூலம் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- ராஜன், ஜவஹர் நகர். (படம் உண்டு)
மேலும்
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?