ரயிலில் கஞ்சா: மதுரைக்காரர்கள் கைது

திண்டுக்கல் : விசாகபட்டினத்திலிருந்து மதுரைக்கு புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்திய மதுரையைச் சேர்ந்த இருவரை திண்டுக்கல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
மதுரை கீழத்தோப்பைச் சேர்ந்தவர் ராமன் மற்றும் கருமாத்துாரைச் சேர்ந்தவர் கணேசன். இவர்கள் நேற்று முன்தினம் விசாகபட்டினம் ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு பயணித்தனர்.
இந்த ரயில் நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி மற்றும் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் பயணித்த ராமன், கணேசனை விசாரித்த போது 5 கிலோ கஞ்சா, வெளி மாநில மதுபாட்டில்கள், குட்கா பொருட்களை மதுரைக்கு கடத்தி செல்வது தெரிந்தது. அவர்களை கஞ்சாவுடன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?