மது விற்பனை 13வது முறையாக சிக்கிய பெண்

சென்னை, பட்டினம்பாக்கம், அல்போன்சா விளையாட்டு மைதானம் அருகே, போலீசார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்த பெண்ணை கையும் களவுமாக மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பட்டினப்பாக்கம் லுாப் சாலையைச் சேர்ந்த விஜயா, 65, என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜயா, ஏற்கனவே சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக, 12வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து 41 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement