பைக் மீது கார் மோதிவாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதிவாலிபர் பரிதாப பலி

குளித்தலை:பைக் மீது கார் மோதிய விபத்தில், வாலிபர் பலியானார்.திருச்சி மாவட்டம், உறையூர் மேலதெருவை சேர்ந்தவர் ராஜராஜன், 31. இவர் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் நேற்று முன்தினம் மாலை, 5:15 மணியளவில் சொந்த வேலையாக கரூர் சென்றார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாலாபேட்டை மேம்பாலத்தில், கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த பொலிரோ கார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து பைக் மீது மோதியது. இதில் ராஜராஜன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜராஜனின் அண்ணன் ஸ்ரீராம், 34, கொடுத்த புகார்படி விபத்து ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் விஷ்ணுகுமார், 53, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement