பசுமைப்படை இயற்கை முகாம்

சிவகங்கை : தேசிய பசுமைப்படை சார்பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான இயற்கை முகாம் நடந்தது.

முகாமிற்கு சிலுக்கப்பட்டி, கோவிலுார், பீர்க்கலைக்காடு, ஓ.சிறுவயல், உஞ்சனை, இலுப்பக்குடி, அமராவதிபுதுார், புளியால், கீழக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இ ருந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம், வேதாரண்யம் உப்பளம், கோடியக்கரை கலங்கரை விளக்கம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் படகு பயணம் உள்ளிட்ட பயணங்களை முகாமில் மாணவர்கள் மேற்கொண்டனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ முகாம் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

Advertisement