மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள்; ராமதாஸ் கவலை

சென்னை: தமிழகத்தில் 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப் படவில்லை. மதிப்பில்லாத பட்டங்களுடன் மாணவர்கள் துயரப்படுகின்றனர் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 85 சதவீதம் பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உருவாகி விடும். ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் தான் இதற்குக் காரணம் எனும் நிலையில் அதற்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழகம் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழகம் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 30 மாதங்களாகவும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 29 மாதங்களாகவும், நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. தமிழகம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் மே 19ம் தேதி நிறைவடைகிறது.
துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, பெரும்பான்மையான பல்கலைக்
கழகங்களில் நிலையான பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், நிதி அலுவலர்களும் இல்லாததால் அவை முடங்கிக் கிடக்கின்றன.
பல்கலைக்கழங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் தான்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஏற்கனவே கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வழக்குகளுடன் இணைத்து உச்சநீதிமன்றத்தில் வேகமாக விசாரிக்கப்பட்டாலும் கடந்த ஒரு மாதமாக அந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்காலத் தீர்ப்பைப் பெறுவது அல்லது வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் மூலம் அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.







மேலும்
-
ஒடிசா சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி தடுத்த போலீசார்
-
விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்
-
அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்
-
'தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு': முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தின் 2வது பல்லுயிர் தளமானது காசம்பட்டி வீரகோயில் வனப்பகுதி
-
தி.மு.க., அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: அண்ணாமலை