கேரள பா.ஜ., தொண்டர் கொலை வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ., தொண்டர் சூரஜ் கொலை வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்காட்டில் கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பா.ஜ., தொண்டர் எளம்பிலாய் சூரஜ் (32), மார்க்சிஸ்ட் கட்சியினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் கடந்த 2003ல் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்த பிறகு இரு தரப்பிலும் விரோதம் வளர்ந்ததால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய கண்ணூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடக செயலாளரின் சகோதரர் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இன்று தலச்சேரி முதன்மை அமர்வு நீதிபதி கே.டி., நிசார் அகமது அளித்த தண்டனை விபரம் அறிவித்தது.
எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்ட னையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.



மேலும்
-
தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி
-
ஹீரோ பைக்குகள் முன்பதிவு துவக்கம்
-
'ஒமேகா செய்கி என்.ஆர்.ஜி.,' இ.வி., ஆட்டோ குறைந்த எடை, அதிக ஆற்றல்
-
ஷைன் 100 ஹோண்டாவின் 'மைலேஜ் மாஸ்டர்'
-
ஸ்கிராம்பிளர் ஐகான் டார்க் டுகாட்டியின் 'பிளாக் ப்யூட்டி'
-
மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ., 10 நிமிட சார்ஜ், 300 கி.மீ., ரேஞ்ச்