சைப்ரஸ் செஸ்: ஹரிகா 'டிரா'

நிகோசியா: சைப்ரஸ் செஸ் 7வது சுற்று போட்டியை இந்தியாவின் ஹரிகா 'டிரா' செய்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 7வது சுற்றில் ஹரிகா, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 28வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் திவ்யா, சீனாவின் ஜினர் ஜு மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 37வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஏழு சுற்றுகளின் முடிவில் ஹரிகா, 4.0 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் சீனாவின் ஜினர் ஜு (5.0 புள்ளி), உக்ரைனின் அனா முசிசுக் (4.5) உள்ளனர். திவ்யா (2.5 புள்ளி) 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மேலும்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு; தமிழக அரசு நாடகத்தை தொடர்ந்து நடத்தமுடியாது: அன்புமணி
-
ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
-
தேவையில்லாம பேசக்கூடாது: ஐ.நா., கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
-
சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' : தமிழக காங்., தலைவர் குற்றச்சாட்டு
-
காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்