சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' : தமிழக காங்., தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: '' யுடியூபர் சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' உள்ளது. அதற்காக என்னை குறி வைத்துவிமர்சிக்கிறார்,'' என தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தாக்குதல்
சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில், 'சவுக்கு மீடியா' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மற்றும் 68 வயதான அவரின் தாய் கமலாவும், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலையில், துாய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து வந்த கும்பல், அவரது வீட்டுக்குள் நுழைந்து, சங்கரின் தாய் கண்முன், வீட்டில் இருந்த பொருட்களை சூறைாடினர். 'டைனிங் டேபிள்', படுக்கை அறை என, எல்லா இடங்களிலும், மலத்தை வீசியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி உள்ளார்.
முறையிடலாம்
இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது: இந்த சம்பவத்தை நான் ஏற்கனவே கண்டித்து இருக்கிறேன். கண்டிக்கிறேன். அதற்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை. ஒன்று மட்டும் செய்தி. இவ்வளவு காலமாக மலத்தை அள்ளிவிட்டு அந்த கையால் கழுவிவிட்டு சாப்பிடுவதும் மலவாசத்துடன் சாப்பிடுவதும், மல வாசனையுடன் குழந்தைக்கு பால் கொடுப்பதும் மாறி, முதல்வர் இந்தியாவில் இல்லாத அற்புதமான திட்டத்தை கொடுத்து இருக்கிறார்.
இதில் தவறு ஏதும் இருந்தால், தகுந்த அதிகாரிகளிடம் முறையிடலாம். அல்லது நீதிமன்றத்தில் முறையிடலாம். உண்மையை வெளியே கொண்டு வரலாம். இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அந்த மக்களை பற்றி கொச்சைப்படுத்துவது, குடித்து விட்டு தூங்குகிறார்கள், குடித்து விட்டு படுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தகுதியற்றவர்கள். இதைஎல்லாம் பேசக்கூடாது.
செயல்திட்டம்
தாக்குதல் நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. அவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வைத்து இருந்தால் கொடுக்க சொல்லுங்கள். மாநகராட்சி ஒப்பந்தத்தை நான் எப்படி எடுக்க முடியும். அது குறித்த ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டியது தானே. நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்
என் மீது குறி வைக்க, அவருக்கு மறைமுக 'அஜென்டா' உள்ளது. நான் மாநில தலைவராக இல்லாவிட்டால், அவருக்கு வேண்டியவரை கொண்டுவர அனைத்து முயற்சியையும் மேற்கொள்கிறார். நல்ல முயற்சிதான். அனைத்தையும் கட்சி மேலிடம் பார்த்து கொண்டு இருக்கிறது. இல்லாத குற்றச்சாட்டுகளை ஏன் அவர் பேசுகிறார். அவருக்கு வேண்டியவரை கொண்டு வர முயற்சிக்கிறார். இது அவரின் செயல்திட்டம். வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைத்து மேலிட பொறுப்பாளர்களுக்கு தெரியும். தமிழக மக்களுக்கும், தமிழக தலைவர்களுக்கும், டில்லி தலைவர்களுக்கும் தெரியும்.
கவலையில்லை
ஆம்ஸ்டிராங் வழக்கு உள்ளிட்ட அனைத்து சதியையும் சொல்லுவார் எல்லா திட்டங்களையும் தீட்டுவார். இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தார். இதை விட நிறைய பேசி உள்ளார். இந்தியாவையே நான் தான் முடிவு செய்கிறேன். எல்லா தொழிலையும் நான் தான் முடிவு செய்வேன் என்பார். அவரின் மறைமுக 'அஜென்டா', அட்டாக் பண்ணணும். இதன் மூலம் எதாவது கிடைத்தால், காய்நகர்த்தி என்னை அகற்றிவிட்டு அவருக்கு வேண்டியவரை கொண்டு வர முயற்சிக்கிறார். இதை நான் சொல்லவில்லை. இன்று கூட ஒரு 'டுவீட்' போட்டு இருந்தனர். அவரின் மறைமுக 'அஜென்டா' என்னவென சொன்னார்கள். எனக்கு அதை பற்றி கவலையில்லை.
அவர் வீட்டில் மலம் வீசியதை நான் கண்டித்து இருக்கிறேன். இதை யாரும் அனுமதிக்கவில்லையே. காங்கிரஸ் கட்சி இதை கண்டிக்கிறது. காங்கிரஸ் இதை அனுமதிக்காது. தலைவராகிய நான் இதனை கண்டித்து இருக்கிறேன். அவர் செயல்திட்டத்தை அவர் நிறைவேற்றுகிறார். என்னை திட்டுவதால் அவருக்கு நிறயை பணம் கிடைப்பதால் வாழ்த்துகள். நிறைய பணம் சம்பாதிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.











மேலும்
-
15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்
-
தி.மு.க., நிர்வாகியை விமர்சித்த கவுன்சிலர் கணவர் மீது புகார்
-
அப்போலோ மகப்பேறு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை
-
வங்கி கணக்கை விற்று மோசடி : சென்னை வாலிபர் கைது
-
கடன் தொல்லையால் தி.மு.க., கிளைச் செயலாளர் தற்கொலை
-
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி