போபண்ணாவை வென்ற பாம்ப்ரி: மயாமி மாஸ்டர்ஸ் டென்னிசில்

மயாமி: மயாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி, போபண்ணா ஜோடியை வென்றது.

அமெரிக்காவில், மயாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 3-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பாம்ப்ரி 'நம்பர்-1': ஏ.டி.பி., இரட்டையர் தரவரிசையில் போபண்ணா 43வது இடத்துக்கு தள்ளப்படுகிறார். யூகி பாம்ப்ரி, 29வது இடத்துக்கு முன்னேறுகிறார். இதனையடுத்து இரட்டையர் தரவரிசையில் 286 வாரம் (2019, அக்., 7 முதல்) இந்தியாவின் 'நம்பர்-1' வீரராக வலம் வந்த போபண்ணாவின் முதலிடம் பறிபோகிறது. யூகி பாம்ப்ரி, இந்தியாவின் புதிய 'நம்பர்-1' வீரராகிறார்.

Advertisement