காந்தியவாதி கிருஷ்ண பாரதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

5


புதுடில்லி: ஆந்திராவைச் சேர்ந்த காந்தியவாதியான கிருஷ்ண பாரதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


சுதந்திர போராட்ட வீரர்களாக பசல கிருஷ்ண மூர்த்தி மற்றும் அஞ்ச லட்சுமி தம்பதியின் 2வது மகள் கிருஷ்ண பாரதி,92. இவர் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.


காந்திய கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்ட இவர், வாழ்நாள் முழுவதும் அதனை கடைபிடித்தார். தலீத் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பாடுபட்டவர். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாத கிருஷ்ண பாரதி, வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "பசல கிருஷ்ண பாரதியின் மறைவு மனவேதனையை அளிக்கிறது. காந்திய கொள்கையை கடைபிடித்து வந்த அவர், காந்தியின் சிந்தனைகளின் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளான தனது பெற்றோரின் பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்து சென்றுள்ளார். பீமாவரத்தில் அவரை சந்தித்ததை நினைவுகூறுகிறேன். அவரது மறைவுக்கு எனது இரங்கல்," இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement