பணியின் போது காவலாளி பலி சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 57. இவர், கும்மிடிப்பூண்டி அருகே சின்னபுலியூர் கிராமத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 22ம் தேதி பணிக்கு சென்றவர், நேற்று முன்தினம் வரை தொடர்ந்து பணியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று, அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் நிவாரணம் கேட்டு கந்தசாமியின் சடலத்துடன், அவர் பணிபுரிந்த தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement