எல்லாம் தோனிக்காக..


மகேந்திர சிங் தோனி சுருக்கமாக தோனி

எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இவருக்கு இருப்பது போல ரசிகர்களிடம் கிரேஸ் இருக்குமா? என்பது தெரியவில்லை?
Latest Tamil News
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 18 வது முறையாக களம் இறங்கினார்.அவரைப் பார்ப்பதற்காகவே நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர்.
Latest Tamil News
43 வயதானாலும் பிட்டாகவே இருக்கிறேன் என்பதை 'ஸ்டம்பிங்' செய்து ஒரு வீரரை அவுட்டாக்கியதன் மூலம் நிருபித்தார்.ஆனால் அந்த ஹெலிகாப்டர் ஷாட் எல்லாம் முடிந்து கிடையாது அதற்கு காரணம் வெற்றி பெற நான்கு ரன் தேவை என்ற நிலையில்தான் அவரே களமிறங்கினார்.
Latest Tamil News
அவர் விளையாட வரவேண்டும் என்பதற்காகவே அவரது அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரரை அவுட்டாகும்படி ரசிகர்கள் கோஷமிட்ட விநோதமும் நடந்தது.
Latest Tamil News
மூவாயிரம் டிக்கெட் 18 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளமார்கெட்டில் விற்றபோதும் அது பற்றி கவலைப்படாமல் மைதானத்திற்கு வெளியே அதை வாங்கிக்கொண்டு இருந்தனர்,பெரும்பாலும் இளைஞர்கள்தான் அந்த இளஞைர்கள் கூட்டத்தில் சரிக்கு சமமாக பெண்களும் இருந்தனர்.

முன்னாள் கிரிக்கெட்டர்களான ஸ்ரீகாந்த் , ரெய்னா ஆகியோர் டி.வி., காம்ப்யராக மைதானத்திற்குள் அவ்வப்போது எட்டிப்பார்த்தபடி இருந்தனர்.சென்னை வெற்றி பெறுவது நிச்சயம் என்றாலும் அதை கடைசி ஒவர் வரை இழுத்துச் சென்றனர்.சென்னை அணியில் உள்ள ஒரே சென்னை அணி வீரரான அஷ்வின் சுழல் பந்துவீ்ச்சில் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது.

சீசனின் முதல் நாள் என்பதால் இசையமைப்பாளர் அனிருத்தை சூப்பர் கிங்ஸ் சின்னம் கொண்ட ஜீப்பில் ஏற்றி பாடிக்கொண்டே மைதானத்தை வலம் வரச்செய்தனர்,அவரும் ஏதோ பாடினார் யாருக்கும் கேட்கவில்லை.அந்த இருபது நிமிடத்திற்கு எத்தனை லட்சம் வழங்கப்பட்டதோ?இது போக மைதானத்தை இருட்டாக்கி விளக்கு மாட்டிய சட்டை அணிந்தவர்களின் நடன நிகழ்ச்சி என்று ஒன்றை நடத்தி முயற்சித்தனர் ம்ஹீம் அதுவும் எடுபடவில்லை.

போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்து வெளியேறிய விஜபி.,க்களின் கார்களை பத்திரமாக வெளியேற்றுவதில் காட்டிய அக்கறையை போலீசார் ரசிகர்களிடம் காட்டியிருந்தால் முட்டி மோதிக் கொள்ளாமல் நல்லபடியாக வெளியேறியிருப்பர்.அடுத்து நடைபெறும் போட்டிகளின் போதாவது இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

-எல்.முருகராஜ்

Advertisement