முதியவர் தற்கொலை

பாகூர்: பாகூர் ஜெயராம் நகரை சேர்ந்தவர் தெய்வநாயகம் 75; கூலி தொழிலாளி. மனைவியை இழந்த துக்கத்தால் இவர் அதிகளவு மது குடித்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், பாகூர் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் தெய்வநாயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement