பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, பணம், நகை பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தலை சேர்ந்தவர்கள் செல்வராசு மகன் சிவக்குமார், 23; குப்புசாமி மகன் வினோத்குமார், 23; இருவரும், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.

அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, 50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், வினோத்குமார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement