தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!

3

ஆரா: பிஹாரில் உள்ள ஆரா ரயில் நிலையத்தில் இளம்பெண், அவரது தந்தையைக் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலத்தில் ஆரா ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள பிளாட்பாரத்தில் ரயிலுக்காக, நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் அவரது தந்தையை, அங்கு வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொன்றுவிட்டுதானும் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது.

சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் மூத்த அதிகாரி பிரகாஷ் பந்தா கூறியதாவது:
இந்த சம்பவம் ஆரா ரயில் நிலையில் உள்ள பிளாட்பாரம் 3 மற்றும் 4 க்கு இடையே உள்ள பாதையில் நடந்தது. உயிரிழந்தவர்கள் விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள், அனில் சின்ஹா மற்றும் அவரது மகள் ஜியா குமாரி 17,என்றும் துப்பாக்கியால் சுட்ட வாலிபன் பெயர் அமன் குமார் 24, போஜ்பூரை சேர்ந்தவர் என்பது உறுதியானது. அனில் சின்ஹா மற்றும் அவரது மகள் ஜியா குமாரி இருவரும் டில்லி செல்வதற்காக ரயில்நிலையத்திற்கு வந்துள்ளனர்.
காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரகாஷ் பந்தா கூறினார்.

Advertisement