கஞ்சாவுடன் நால்வர் கைது

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், நான்கு வாலிபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார், அப்பகுதியில் சோதனையிட்ட போது, மூன்று கிலோ கஞ்சாவுடன் நான்கு பேரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி முனுசாமி நகர் மோனிஷ், 23, சிவனேசன் காலனியைச் சேர்ந்த இமானுவேல், 24, உள்ளிட்ட நான்கு பேர் என்பது தெரிந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement