வைப்பூர் ஜெடா முனீஸ்வரன் கோவில் விழா

ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் ஒன்றியம்,வைப்பூர் கிராமத்தில், ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி முனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

இந்த கோவிலில், திருப் பணிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு மஹாகும்பாபிஷேக விழாநடந்தது.

இந்த நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாநேற்று நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு, ஜெடா முனிஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் ஜெடா முனிஸ்வரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைப்பூர், காரணித் தாங்கல், குழாங்கல் சேரி, வஞ்சு வாஞ்சேரி உள்ளிட்ட கிராமத்தினர் முனிஸ்வரனை வழிபட்டனர்.

Advertisement