2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,230 ரூபாய்க்கும், சவரன், 65,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று (மார்ச் 24) தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 8,215 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,185க்கும் விற்பனை செய்கிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது.
மேலும்
-
விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி
-
போலீசாருக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்கணும்: மனித உரிமை ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம்; மத்திய அரசு ஒப்புதல்
-
உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது: எதிர்க்கட்சிகளுக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
செல்வப்பெருந்தகை ஊழலுக்கு தி.மு.க., உடந்தையா: அண்ணாமலை கேள்வி