ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; மனித உரிமை ஆணையம் விசாரணை!

3


சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.


திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், இந்த கொலை வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில டிஜிபி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement