கல்குவாரி அமைத்தல்குறித்து கருத்து கேட்பு


கல்குவாரி அமைத்தல்குறித்து கருத்து கேட்பு


புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அருகே விண்ணப்பள்ளி ஊராட்சி குரும்பபாளையம் கிராமத்தில் ,புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், நால்ரோட்டில் நேற்று நடந்தது. கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் வனஜா முன்னிலை வகித்தார். சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். குவாரிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் கருத்து தெரிவித்தனர். காலை, 11:௦௦ மணிக்கு தொடங்கி கூட்டம் மதியம், 1:௦௦ மணிக்கு முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் கருத்துக்களை அடங்கிய மனுக்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

Advertisement