தாலுகா அலுவலகத்தை வி.சி., கட்சியினர் முற்றுகை

விருத்தாசலம், : அரசு பட்டா வழங்கிய இடத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் கழிவுநீர் விடுவதை கண்டித்து, வி.சி., கட்சி சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். இதில், விருத்தாசலம் மேட்டுக்காலனி அருந்ததியர் மக்கள் 184 பேருக்கு 2003ம் ஆண்டு எருமனுார் சாலையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா இடத்தில், விடுதியுடன் கூடிய தனியார் பள்ளியில் இருந்து கழிவுநீர் திறந்து விடுவதை கண்டித்து கோஷமிட்டனர்.

பின், தாசில்தார் உதயகுமாரிடம் மனு கொடுத்த பொதுமக்கள், உடனடியாக காலி மனையை சீரமைக்காவிட்டால் பள்ளியை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.

நகர செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், வழக்கறிஞர் மதுசூதனன், நிர்வாகிகள் அய்யாதுரை, சதீஷ், ரமணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement