மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடை விடு முறையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், இந்த ஆண்டு, 12 நாட்கள் வீதம், ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி ஏப்., 1 முதல், 13 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி, 15 முதல், 27 வரையும், மூன்றாம் கட்ட பயிற்சி, 29 முதல் மே, 11 வரையும், நான்காம் கட்ட பயிற்சி மே 13 முதல், 25 வரையும், ஐந்தாம் கட்ட பயிற்சி, 27 முதல் ஜூன் 8 வரையும் வழங்கப்பட உள்ளது.

காலை, 7:00 முதல், 8:00 மணி வரையும், 8:00 முதல், 9:00 மணி வரையும், 9:00 முதல், 10:00 மணி வரையும், மதியம், 2:00 முதல், 3:00 மணி வரையும், 3:00 முதல், 4:00 மணி வரையும், 4:00 முதல், 5:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக, 1,500 ரூபாய் மற்றும், 18 சதவீத ஜிஎஸ்டியுடன் https://sdatservices.tn.gov.in/#/membershipbooking/register என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 90801 44183, 74017 03487, 73056 24554, 97514 84846 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement