மேகதாது திட்டம்: சிவகுமார் உறுதி

பெங்களூரு, : “மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று, தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். காவிரி நம் தண்ணீர், நம் உரிமை. கடந்த காலத்தில் ஜே.எச்.படேல் முதல்வராக இருந்தபோதும், நாங்கள் பலமுறை தண்ணீர் பிரச்னை குறித்து விவாதித்து உள்ளோம்.
மேகதாது திட்டத்தில் நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்பிக்கை உள்ளது. நீதிமன்ற முடிவில் யாரும் தலையிட முடியாது. தங்கள் வாதங்களை தமிழகம் முன்வைக்கட்டும்; நாமும் வாதங்களை முன்வைப்போம்.
மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதிக நன்மை
மேகதாது திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தருவதாக தேவகவுடாவும், குமாரசாமியும் கூறி இருந்தனர். இதுவரை ஏன் செய்யவில்லை? அரசியலில் பல அழுத்தங்கள் உள்ளன. மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்கு தான் அதிக நன்மை.
வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். எனவே இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணா நதிநீர் குறித்து விவாதிக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் நேரம் கேட்டுள்ளேன்.
அரசியலமைப்பை மாற்றுவோம் என்று நான் சொல்லவே இல்லை. அப்படி சொல்லி இருந்தால், 'ஆமாம் சொன்னேன்' என்று ஏற்றுக்கொண்டு இருப்பேன். அரசியலமைப்பு அமல்படுத்தியதே நாங்கள் தான். அதை பாதுகாத்தும் வருகிறோம்.
அரசியல் ஓய்வு
அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறியது பா.ஜ., தலைவர்கள் தான். நான் கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அரசியலமைப்பு விவகாரம் குறித்து மேலிட தலைவர்களிடம் என்னிடம் கேட்டனர். ஆவணங்களை எடுத்து பார்க்கும்படி கூறினேன். அவர்களும் பார்த்துவிட்டு என் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டனர்.
நான் செல்லும் இடம் எல்லாம் கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று, பா.ஜ., முடிவு செய்து உள்ளது. அவர்களுக்கு என் மீது அன்பு அதிகம். அவர்களால் என்னை பற்றி சிந்திக்காமல், பேசாமல் இருக்கவே முடியாது. தமிழகத்தில் எனக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதை பார்க்க காத்து இருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
நான் திஹார் சிறையில் இருந்த போது, மடாதிபதி நிர்மலானந்தா சுவாமியின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக பத்திரிகையில் படித்தேன். அதை சி.பி.ஐ., விசாரித்தது. விசாரணை நிலை என்ன என்று தெரியவில்லை. முதலில் சி.பி.ஐ., அறிக்கை வெளியிடட்டும்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மூத்த தலைவர். அவருக்கு கட்சியை வழிநடத்துவதிலும், அரசின் அங்கமாக இருப்பதிலும் அனுபவம் உண்டு. அவரும், முதல்வரும் அனைத்து வகையான விசாரணையும் நடத்தி, அமைச்சர் ராஜண்ணாவுக்கு ஹனிடிராப் வழக்கில் நீதி வழங்குவர் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கியது மியான்மர்; தாய்லாந்தில் மண்ணுக்குள் புதைந்த கட்டடங்கள்
-
குன்றத்துார் இ.பி., ஆபீஸ் இடமாற்றம்
-
ராஜிவ்காந்தி ஜி.ஹெச்.,சில் 'லேப்ரோஸ்கோப்' கருவிகள்
-
கோ - ஆப்டெக்ஸ் துணி 30 சதவீதம் தள்ளுபடி
-
2 உதவி கமிஷனர்கள் உட்பட 36 பேர் ஓய்வு
-
வேட்டி - சட்டை ஆசைகாட்டி முதியவரின் நகை பறித்தவர் கைது