ராஜிவ்காந்தி ஜி.ஹெச்.,சில் 'லேப்ரோஸ்கோப்' கருவிகள்

சென்னை:சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நுண்துளை அறுவை சிகிச்சைக்காக, 65.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் '4கே' கேமரா சிஸ்டத்துடன் கூடிய, 'லேப்ரோஸ்கோப்' கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இதற்கான நிதியை மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், அவரது கட்டுப்பாட்டில் இயங்கி வரும், எம்.ஓ.பி.எல்., மற்றும் 'கடப்பாக்கம் சாரிட்டி' ஆகிய தொண்டு நிறுவனங்கள் வழங்கின.

நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த விழாவில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சுந்தர், 'லேப்ரோஸ்கோப்' கருவிகளை, நோயாளிகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். நிகழ்வில், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், துறைத் தலைவர் ஜாகிர் உசேன், சார்பு நீதிபதி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement