2 உதவி கமிஷனர்கள் உட்பட 36 பேர் ஓய்வு

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், உதவி கமிஷனர்கள், சகாதேவன், இளங்கோவன் உட்பட, 36 போலீசாரின் பணி நிறைவு விழா நேற்று நடந்தது.

அவர்கள் காவல் துறைக்கு பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி, கமிஷனர் அருண் பாராட்டினார்.

அப்போது, 'ஓய்வு பெற்றவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ, அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ, தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம். தங்கள் உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும்' என, கமிஷனர் அருண் அறிவுறுத்தினார்.

Advertisement