மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ., 10 நிமிட சார்ஜ், 300 கி.மீ., ரேஞ்ச்

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'சி.எல்.ஏ.,' காரை மின்சார மற்றும் ஹைபிரிட் வகையில் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த காரின் முன் மாதிரி கார், ஜனவரியில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
மின்சார வகை கார், 800 வி 'ஹை வோல்டேஜ்' கட்டுமான தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில், 792 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும். இதில், 85 கி.வாட்.ஹார்., 'என்.எம்.சி.,' பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறைந்த ஆற்றலில், அதிக துாரம் வரை பயணிக்கும் திறன் இந்த பேட்டரிக்கு உண்டு. இதை, 320 கி.வாட்., பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 300 கி.மீ., ரேஞ்சை வழங்க முடியும்.
முதற்கட்டமாக, மின்சார வகை கார், ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும். அதை தொடர்ந்து, ஹைபிரிட் கார் அறிமுகமாகும். மின்சார கார், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் வெளியாக உள்ளது. ஹைபிரிட் கார் இங்கு வெளியாகுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் நெரிக்கப்படும் குரல்; முதல்வர் ஸ்டாலின்
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு
-
முகாமில் அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரர்; சமரசம் செய்த அதிகாரிகள்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்
-
தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி