மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு

12


சென்னை: சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர்.


சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவி தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம் ஆனது.


பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


புகார் குறித்து தகவல் அறிந்து பாலியல் தொல்லை அளித்த மாணவர் முகமது பைசல் தலைமறைவாகி விட்ட நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement