கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி வீட்டில் போலீஸ் சோதனை

பிரயாக்ராஜ் : டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய சம்பவத்தில் இன்று அவரது வீட்டில் போலீஸ்படை சோதனை நடத்தியது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லியின் துக்ளக் சாலையில், இவர் வசிக்கும் அரசு பங்களாவில், கடந்த 14-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது.
நாடு முழுதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது.மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து மூத்த நீதிபதி உபாத்யாயா தலைமையிலான 3 நீதிபதிகள அடங்கிய குழு விசரணை நடத்தி அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நீதிபதிகள் குழு உத்தரவின் பேரில் இன்று டில்லி போலீஸ் படை டில்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியது. சோதனை முடிந்து வெளியே வந்த போலீசாரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவர்களிடம் பேட்டி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.






மேலும்
-
ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75வது வர்தந்தி மகோத்ஸவம்; நாளை துவக்கம்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
அரைசதம் அடித்தார் சாய் சுதர்சன்; குஜராத் அணி ரன் குவிப்பு
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி: உறுதி அளித்தார் பிரியங்கா