எங்க சம்பளத்தையும் உயர்த்துங்க... : டில்லி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

புதுடில்லி: பார்லிமென்ட் லோக்சபா எம்.பி.க்கள் போன்று தங்களுக்கு சம்பளம் உயரத்தி தர வேண்டும் என டில்லி சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று குழு ஒன்றை டில்லி பா.ஜ., அரசு நியமித்துள்ளது.
பாராளுமன்ற எம்.பி.க்கள் பல்வேறு சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளுடன் தொகுதி அலவன்சாக மாதத்திற்கு ரூ.70,000 மற்றும் அலுவலக அலவன்சாக மற்றொரு ரூ.60,000 பெறுகிறார்கள். இவர்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆகவும், டி.ஏ., அலவன்ஸ் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும், ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31,000 ஆகவும், கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டு இந்த உயர்வு கடந்த ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிட்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் நடைபெற்று வரும் டில்லி சட்டசபை கூட்டத்தொடரின் போது பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு போன்று தங்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பா.ஜ.,வை சேர்ந்த அபெய் வர்மா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இரு வாரங்களில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவரியில் டில்லி சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் அலன்ஸ் திருத்தியமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டது. . அதன்படி எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் பிற சலுகைகள், ஏனைய படிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.54 ஆயிரத்திலிருந்து ரூ. 90 ஆயிரமாகவும், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் ரூ. 72 ஆயிரத்திலிருந்து ரூ. 1.7 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
மியான்மருக்கு உதவ 'ஆபரேஷன் பிரம்மா' துவக்கியது இந்தியா
-
ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75வது வர்தந்தி மகோத்ஸவம்; நாளை துவக்கம்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
அரைசதம் அடித்தார் சாய் சுதர்சன்; குஜராத் அணி ரன் குவிப்பு