அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகினார் இளவரசர் ஹாரி

2

லண்டன்: தாயார் டயானாவை கவுரவிக்கும் விதமாக, எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரி விலகியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை 2018ல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையர் அல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், மேகனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், அரச குடும்பத்தில் இருந்து விலகினார்.


தற்போது, தன்னுடைய தாயாரும், இளவரசியுமான டயானாவை கவுரவிக்கும் விதமாக, தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் இணை நிறுவனர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு சென்டேபல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பெண்களுக்கு உதவி செய்து வந்தார்.


அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்து ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஷோபி சந்தவுகா பதவி விலக மறுத்ததால் எழுந்த பிரச்னை காரணமாக, இணை நிறுவனரான லெசோதோ இளவரசர் சீசோவுடன் இணைந்து ஹாரியும் அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


20 ஆண்டுகளுக்கு மேலாக இளவரசர் ஹாரி இந்த அறக்கட்டளையின் மூலம் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

Advertisement