சாலையில் முகாமிடும் கால்நடைகள் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் உலா வரும் கால்நடைகளை, நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலுார் பஜார் சாலை, ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டு சிறிய சாலையாக மாறி உள்ளது.
சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகளை, வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால் அதிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை சாலைகளில் மேய விடுவதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, கால்நடைகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்டம் இயற்றுங்க: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்; படம் வெளியிட்டு முதல்வர் வேண்டுகோள்
-
திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்
-
ஏப்ரல் 2 முதல் கனமழை: வானிலை மையம் தகவல்
-
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை வன்கொடுமை செய்த நபர் கைது
-
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு காலில் 'மாவுக்கட்டு'
Advertisement
Advertisement