மனவளர்ச்சி குன்றிய பெண்ணை வன்கொடுமை செய்த நபர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறையை சேர்ந்த, 33 வயது மனவளர்ச்சி குன்றிய பெண், தன் தாயுடன் வசித்து வருகிறார். பெண்ணின் தாய், ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, வீடு திரும்பிய தாயிடம், இளம்பெண் கதறி அழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தாய் விசாரித்த போது, இளைஞர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து, தகாத முறையில் நடந்து கொண்டதாக இளம்பெண் கூறியுள்ளார்.

தாய் புகாரில், ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசார் சன்னங்குளம் மணிகண்டன், 30, என்பவரை கைது செய்தனர்.

Advertisement